top of page
Official Website of Author



நானாகிய நான்...
ப்ரவெளொயில்
அகமெனும் பரவெளியில் தேர்த்துகளாய்த் திரிந்தலையும் நானாகிய நான்- பெரும்பான்மைப்பொழுதுகளில் இறக்கை தேடும் சிறுமியாகவும் மற்ற பொழுதுகளில் பெண்ணாகவும் சில சமயங்களில் விளிம்புகளில் அகப்படாத ஏதோ உணர்வாகவும் உழலும் மானுடப்பிறப்பு.
கதைகளிலே பெரும்பாலும் என் இருப்பு.
நிஜங்களில் இருந்து கற்பனைக்குத்தாவும் பாய்ச்சலில் அலாதி மயக்கமுண்டு.
விஞ்ஞானமும் மெய்ஞானமும் என் ஆர்வம் கீறும். காதலும் ஹாஸ்யமும் கடந்து சமூக அக்கறை மெலிதாய்த் தலைகாட்டும் எழுத்து இப்போதைய நிலை.
கவிதைகளில் சொல்லிவிட முடியாத ஆயிரம் கனத்த மௌனங்களை உள்ளே சுமந்தபடி அலையும் ஜீவன்.
என் எழுத்து யாருக்கானதும் அல்ல.
என் சுயத்தைப்பரிசீலித்துப்பார்க்கும் எனக்கான வினாத்தாள்.
ஏதோ ஒருவகையில் அது உங்களுக்கும் பயன்படுமானால் மகிழ்ச்சி...
About
My Books

பிரபலங்கள் சொன்னது
Events

Press
Contact
bottom of page






